உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மன்னார்குடி வெங்கடாஜலபதி கோவிலில் சகஸ்ர தீப அலங்கார சேவை

மன்னார்குடி வெங்கடாஜலபதி கோவிலில் சகஸ்ர தீப அலங்கார சேவை

மன்னார்குடி; மன்னார்குடி அருகே உள்ள சேரன்குளம் வெங்கடாஜலபதி கோவிலில் கார்த்திகை மாத திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு சகஸ்ர தீப அலங்கார சேவை நடத்தப்பட்டது. முன்னதாக உற்சவர் சீனிவாச பெருமாள் பூதேவி, ஸ்ரீதேவி சமேதராக கோவிலின் பிரகாரத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து, சுவாமிகளுக்கு முன்பாக சங்கு, சக்கரம், திருமன் மற்றும் தாமரை உள்ளிட்ட வடிவங்களில் வண்ணமயமான வடிவம் வரையப்பட்டு சகஸ்ர தீபங்கள் ஏற்றப்பட்டு இருந்தது. ஏராளமான பக்தர்கள் அகல் விளக்குகளை ஏற்றி வைத்து சுவாமிகளை வழிபட்டனர். ஸ்ரீதேவி பூதேவி தாயார்கள் சமேத சீனிவாச பெருமாளுக்கு தீப தூப ஆராதனை மற்றும் அலங்கார தீப ஆராதனை கட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !