உக்கடம் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு அபிஷேகம்
ADDED :672 days ago
கோவை; உக்கடம் கோட்டைமேடு பூமி நீளா சமேத கரி வரதராஜ பெருமாள் கோவிலில் கார்த்திகை மாதம் நான்காவது சனிக்கிழமையை முன்னிட்டு மூலவர் மற்றும் உற்சவருக்கு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. இதில் உற்சவர்ஸ்ரீதேவி பூதேவி சமேதரராக முத்தங்கி அலங்காரத்துடன் புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.