திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் கார்த்திகை முதல் சோமவார வழிபாடு
மயிலாடுதுறை: திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் கார்த்திகை முதல் சோமவார வழிபாடு நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் மற்றும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. தேவார பாடல் பெற்ற, அட்டவிரட்ட தளங்களில் ஒன்றான இக்கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து ஆயுள் திருத்தி வேண்டி கோமங்கள் செய்து வழிபாடு நடத்தி செல்கின்றனர் இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலில் இன்று கார்த்திகை மாத முதல் சோமவாரத்தை யொட்டி 1,008 சங்காபிஷேகம் நடந்தது. முன்னதாக புனித நீர் அடங்கிய கடங்களும், சங்குகளும் வைத்து சிறப்பு யாகம் நடந்தது. பின்னர் பூஜிக்கப்பட்ட புனித நீரை கொண்டு சாமிக்கு அபிஷேம் செய்யப்பட்டு மகா தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. இதில் தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குருமஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் கலந்து கொண்டு தரிசனம் செய்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். இதே போல் திருமெய்ஞானம் பிரம்மபுரீஸ்வரர் கோவில், ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் கோவிலில், சீர்காழி பிரம்மபுரீஸ்வரர் கோவில், வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாத சுவாமி ஆலயம், மயிலாடுதுறை மாயூரநாதர் கோவில் உள்ளிட்ட பல்வேறு சிவாலயங்களில் கார்த்திகை மாதம் முதல் சோமவார வழிபாடு நடைபெற்றது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.