தர்மசாஸ்தா ஐயப்ப சுவாமி கோவிலில் ஆண்டு விழா
கிணத்துக்கடவு: மெட்டுவாவி தர்மசாஸ்தா ஐயப்ப சுவாமி கோவிலில் ஆண்டு விழா நடந்தது.
கிணத்துக்கடவு, மெட்டுவாவி தர்மசாஸ்தா ஐயப்ப சுவாமி கோவில், 15ம் ஆண்டு விழா நிகழ்ச்சி கடந்த, 20ம் தேதியன்று பரதநாட்டிய நிகழ்ச்சியுடன் ஆரம்பமானது. 21ம் தேதி, துவஜஸ்தம்பம் கொடி ஏற்றுதல் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. இதில், சபரிமலை முன்னாள் மேல்சாந்தி சசி நம்பூதிரி கலந்து கொண்டு பூஜை செய்தார். தொடர்ந்து மாலையில், வானவேடிக்கை, ஜெண்டை மேளம், ஐயப்ப சுவாமி தேர் வீதி உலா நடந்தது. 22ம் தேதி, ஆண்டு விழா யாக வேள்வி, மகா அபிஷேகம் மற்றும் அலங்கார தரிசன பூஜை நடந்தது. இதில், பல்லடம் அருள்ஜோதி தபோவனம் மூர்த்தி லிங்க தம்பிரான் சுவாமி மற்றும் ஸ்ரீ அய்யனார் ஆதீனம் குரு மகா சன்னிதானம் ஶ்ரீனிவாச சுவாமி ஆகியோர் பங்கேற்றனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் ஜமாப் ஆட்டம், வள்ளி கும்மி நிகழ்ச்சி நடந்தது. இன்று 23ம் தேதி, ஊஞ்சல் அலங்காரம் மற்றும் தெய்வீக இசை நிகழ்ச்சி நடந்தது. இன்று, 24ம் தேதி, இரவு, 7:00 மணிக்கு, கார்த்திகை தீப ஜோதி தரிசனம் நடக்கிறது.