கோயில்களில் பலிபீடம் எதற்காக அமைக்கப்பட்டு உள்ளது?
ADDED :4807 days ago
மனிதனிடம் ஆணவம், கன்மம், மாயை என்னும் மூவகை அழுக்குகள் உள்ளன. இவை ஆன்மாவை மூடியிருப்பதால் இறைதரிசனம் பெறமுடியாது. பலிபீடத்தை கடந்து செல்லும் போது, மனப்பூர்வமாக இந்த அழுக்குகளை பலியிட வேண்டும் என்பதன் குறியீடாக பலிபீடம் கோயிலில் அமைக்கப்பட்டு உள்ளது.