அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் வீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :634 days ago
கோவை; அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் கார்த்திகை மாதம் கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் அமைந்துள்ள வீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. இதில் வெண்ணை காப்பு மற்றும் வடமாலை அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.