உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மார்கழி செவ்வாய்; பாலதண்டாயுத பாணி சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு

மார்கழி செவ்வாய்; பாலதண்டாயுத பாணி சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு

கோவை; கோவை ராம் நகர் பட்டேல் ரோடு பாலதண்டாயுத பாணி சுவாமி கோவிலில் மார்கழி மாதம் முதல் செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. இதில் வள்ளி தேவசேனா சமேதராக முருகன் புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


*மார்கழி மாதம் முதல் செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு கோவை ஆடிஸ் தெரு தேவி ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது.  வெள்ளி காப்பு கவசத்தில் அருள் பாலித்த அம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !