உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி கோயிலில் இருந்து அறுபடை வீடு ஆன்மீக சுற்றுப்பயணம் துவங்கியது

பழநி கோயிலில் இருந்து அறுபடை வீடு ஆன்மீக சுற்றுப்பயணம் துவங்கியது

பழநி; பழநி கோயிலில் இருந்து தமிழக அரசு அறிவித்த அறுபடை வீடு ஆன்மீகப் பயணம் துவங்கியது.


பழநி கோயிலில் இருந்து இன்று தமிழக அரசின் ஹிந்து சமய அறநிலை துறை சார்பில் அறுபடைவீடு ஆன்மீக சுற்றுப்பயணம் கோயில் தண்டபாணி நிலையத்திலிருந்து துவங்கியது. இதில் திண்டுக்கல்,திருப்பூர், ஈரோடு, கோவை மண்டல பக்தர்கள் 210 பேர் அனுமதிக்கப்பட்டனர். நேற்று பக்தர்கள் பழநி வருகை தந்து இரவு தங்கினர். இன்று காலை பழநி கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர். அதன் பின் அவர்களுக்கான பஸ்களில் ஏறினர். பழநி சப் கலெக்டர் கிஷன் குமார் கொடியசைத்து ஆன்மீக பயணத்தை துவங்கி வைத்தார். பழநி நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி, கோயில் துணை கமிஷனர் வெங்கடேஷ், உதவி கமிஷனர் லட்சுமி உள்ளிட்டோர் வழி அனுப்பி வைத்தனர். திருப்பரங்குன்றம், திருசெந்தூர், பழமுதிர்ச்சோலை, சோலைமலை முருகன் கோயில், திருச்சி, சுவாமி மலை,திருத்தணி கோயில்களில் சுவாமி தரிசனம் முடித்த பின். டிச.,20 அன்று அவரவர் மண்டலத்திற்கு செல்ல உள்ளனர். மூத்த குடிமக்கள் பயணிப்பதால் மருத்துவ குழுவினர் செல்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !