உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆதிசக்தீஸ்வரர் கோவிலில் ஐயப்ப பக்தர்கள் லட்சார்ச்சனை

ஆதிசக்தீஸ்வரர் கோவிலில் ஐயப்ப பக்தர்கள் லட்சார்ச்சனை

விருத்தாசலம்; தே.கோபுராபுரம் ஆதிசக்தீஸ்வரர் கோவிலில் ஐயப்ப பக்தர்களின் லட்சார்ச்சனை நடந்தது. விருத்தாசலம் அடுத்த தே.கோபுராபுரம் ஆதிசக்தீஸ்வரர் கோவிலில் ஐயப்ப பக்தர்கள் இணைந்து லட்சார்ச்சனை நடத்தினர். இதையொட்டி ஆதிசக்தீஸ்வரர், ஆதிசக்தீஸ்வரி சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. தொடர்ந்து ஐயப்ப பக்தர்கள் லட்சார்ச்சனை செய்து வழிபட்டனர். முன்னதாக, திருவாபரண பெட்டியை சுமந்து கோவிலை வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !