திருச்சுழியில் ரமண மகரிஷி ஜெயந்தி விழா; பக்தர்கள் தரிசனம்
ADDED :310 days ago
திருச்சுழி; திருச்சுழியில் ரமண மகரிஷியின் 145வது ஜெயந்தி விழா அவரது பிறந்த இடமான சுந்தர மந்திரம் இல்லத்தில் நடந்தது. உள்நாடு மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் கலந்து கொண்டனர். ரமண மகரிஷி பிறந்த புண்ணிய தலமான திருச்சுழியில் சுந்தர மந்திரம் இல்லத்தில் மார்கழி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தார். நேற்று அவரது இல்லத்தில் விழா நடந்தது. திருவண்ணாமலையில் உள்ள ரமணர் ஆசிரமத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அத்துடன் அமெரிக்காவைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட பக்தர்களும் இதில் பங்கேற்றனர். ரமண மகரிஷி இல்லத்தில் வேத மந்திரங்கள், பூஜைகள், மகா தீபாராதனை நடந்தது.