மேட்டுப்பாளையம் ஐயப்பன் பஜனை சமாஜத்தில் பூஜா வைபவம் துவக்கம்
ADDED :371 days ago
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் காட்டூரில் உள்ள ஐயப்பன் பஜனை சமாஜத்தில் 64-வது ஆண்டுவிழாவை முன்னிட்டு சண்டி ஹோமம் நடைபெற்றது. சுவாமி அய்யப்பனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றது.
மேட்டுப்பாளையம் காட்டூர் எஸ்.கே.சாமி லே-அவுட்டில் அய்யப்பன் பஜனை சமாஜம் உள்ளது. சமாஜத்தின் 64வது ஆண்டு பூஜை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது. விழாவானது இன்று மகா கணபதி ஹோமம் சண்டி ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து, ஸ்ரீ ஐயப்ப சுவாமியின் விக்ரகத்திற்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் ஏராளளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.