சிவ கணேச கந்த பெருமாள் கோயிலில் வாராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்
தேனி; தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு தேனி சிவ கணேச கந்த பெருமாள் கோயிலில் வாராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு வாராகி அம்மனை தரிசித்து சென்றனர்.
தேனி மாவட்டம் தேனியில் பழமை வாய்ந்த ஸ்ரீ சிவகணேச கந்த பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த திருக்கோயிலில் இன்று தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு வாராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது . முன்னதாக கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்ட யாக குன்றத்தில் பலவித மூலிகை பொருட்கள் கொண்டு யாகம் வளர்க்கப்பட்டது. பின்னர் வாராகி அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள், தேன், இளநீர் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்கள் கொண்டு சிறப்பாக அபிஷேகம் நடைபெற்றது. பூஜிக்கப்பட்ட கலச நீரை சுமந்து கொண்டு கோயில் வளாகத்தை சுற்றி வந்து வாராகி அம்மனுக்கு கலச நீரால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வாராகி அம்மனுக்கு பட்டுடுத்தி வண்ணமலர் மாலைகளால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி தந்தார். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு செய்தனர்.