திருப்பதிக்கு பக்தர்கள் பாதயாத்திரை துவக்கம்
ADDED :306 days ago
திருக்கனுார்; செட்டிப்பட்டு வரதராஜ பெருமாள் கோவிலில், மாலை அணிந்து விரதம் இருந்த பக்தர்கள் பஜனைக் குழுவுடன் இன்று திருப்பதிக்கு பாத யாத்திரை புறப்பட்டனர்.
திருக்கனுார் அடுத்த செட்டிப்பட்டு கிராமத்தில் வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், பகவத் ராமானுஜர் பஜனைக்குழு, வரதராஜ பெருமாள் பாதயாத்திரை குழு சார்பில், 9ம் ஆண்டு திருப்பதி, திருமலை பாதயாத்திரை நேற்று துவங்கியது. இதையொட்டி, பெருமாள் சுவாமிக்கு அதிகாலை 5:00 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. மாலை அணிந்து விரதம் இருந்த பக்தர்கள், பஜனைக் குழுவினருடன் இணைந்து காலை 5:30 மணியளவில், திருப்பதிக்கு பாதயாத்திரையாக புறப்பட்டனர். பக்தர்கள் கூட்டேரிப்பட்டு, வந்தவாசி, காஞ்சிபுரம், திருத்தணி, திருச்சானுார் வழியாக திருப்பதி சென்று வரும் 26ம் தேதி சுவாமி தரிசனம் செய்கின்றனர்.