உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மலை இறங்கியது மகா தீப கொப்பரை; திருவண்ணாமலையில் மகாதீபம் நிறைவு

மலை இறங்கியது மகா தீப கொப்பரை; திருவண்ணாமலையில் மகாதீபம் நிறைவு

திருவண்ணாமலை; திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோவிலின் பின்புறம் உள்ள மலை மீது 11 நாட்கள் தொடர்ந்து எரிந்த மகாதீபம் நேற்றுடன் முடிந்து கொப்பரை இன்று கோயிலுக்குள் கொண்டுவரப்பட்டது.

 

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலின் திரு கார்த்திகை தீபத்திருவிழா கடந்த மாதம் 4-ம் தேதி  கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வந்த நிலையில் திருக்கார்த்திகை தீபவிழா 10ம் நாளான 13-ஆம் தேதி அண்ணாமலையார் சன்னதியில் ஏகன்  அனேகனாக மாறும் தத்துவத்தினை விளக்கும் விதமாக கோவலில் உள்ள சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதனை தொடர்ந்து மாலை ஆறு மணிக்கு அண்ணாமலையார் கோயில் பின்புறம் உள்ள 2668 அடி உயரம் கொண்ட மலை மீது  மகா தீபம் ஏற்றப்பட்டது. இந்த மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் தீப ஜோதியாக பக்தர்களுக்கு காட்சியளித்து நேற்றுடன் நிறைவு பெற்றது.  அதனைத் தொடர்ந்து மலை மீது இருந்த கொப்பரை அண்ணாமலையார் கோயிலுக்குள் கொண்டுவரப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். கொப்பரையிலிருந்த மை சேகரிக்கப்பட்டது. அதனுடன் பல்வேறு மூலிகைகள் மற்றும் வாசனை திரவியங்கள் கலந்து தீப மை தயாரிக்கப்பட்டு ஆருத்ரா தரிசனத்தின் போது நடராஜருக்கு நெற்றியில் திலகமிட்டு பின்னர் தீப மைய்யினை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !