உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிருஷ்ணர் அலங்காரத்தில் மன்னார்குடி ராஜகோபாலசுவாமி அருள்பாலிப்பு

கிருஷ்ணர் அலங்காரத்தில் மன்னார்குடி ராஜகோபாலசுவாமி அருள்பாலிப்பு

திருவாரூர்; மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. பகல் பத்து உற்சவத்தின் இரண்டாம் நாள் நிகழ்ச்சி மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவிலில் நடைபெற்றது. இதில் ராஜகோபால சுவாமி கிருஷ்ணராக பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த பகல் பத்து உற்சவத்தில் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். கோவிலில் வரும் பத்தாம் தேதி வைகுண்ட ஏகாதசி திருவிழா நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு நடத்தப்படும் பகல் பத்து உற்சவத்தின் இரண்டாம் நாளான நேற்று சாயக் கொண்டை அணிந்து கிருஷ்ணராக அருள் பாலித்த ராஜகோபாலசாமியின் முன்பு ஆழ்வார்கள் கொண்டுவரப்பட்டு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.  அப்போது தீட்சிதர்கள் நாலாயிர திவ்ய பிரபந்த பாடல்களை பாடி நிகழ்ச்சியினை நடத்தினர்.




தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !