காரமடை அரங்கநாதர் கோவிலில் பகல் பத்து 3 ம் நாள் உற்சவம்
ADDED :639 days ago
காரமடை; காரமடை அரங்கநாத ஸ்வாமி திருக்கோயில் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவத்தின் 3 ம் நாள் சிறப்பு அலங்காரத்தில் ரங்கநாதர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கொங்கு நாட்டில் சிறப்பு வாய்ந்த காரமடை அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி வைபவம் தொடக்கமாக பகல் பத்து உற்சவம் சிறப்பாக துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் தினமும் சுவாமிக்கு பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. பகல் பத்து உற்சவத்தின் 3 ம் நாளான இன்று சிறப்பு அலங்காரத்தில் ரங்கநாதர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.