தேவிபட்டினம் நவபாஷணத்திற்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு
ADDED :289 days ago
தேவிபட்டினம்; தேவிபட்டினம் நவபாஷாணத்திற்கு ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. தேவிபட்டினத்தில் பிரசித்தி பெற்ற நவபாஷாண நவக்கிரகம் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு தோஷங்களுக்கு பரிகார பூஜைகள் செய்யப்படுவதால், இந்த நவக்கிரகம் பிரசித்தி பெற்று விளங்கி வருகிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இக்கோயிலுக்கு தற்போது ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. ராமேஸ்வரம் கோயிலுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளும், ஐயப்ப பக்தர்களும் அதிக அளவில் தேவிபட்டினம் நவபாஷாண கடற்கரை வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். விடுமுறை தினங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. பக்தர்களுக்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.