உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வளையல் அலங்காரத்தில் திருச்சி பகவதி அம்மன் அருள்பாலிப்பு

வளையல் அலங்காரத்தில் திருச்சி பகவதி அம்மன் அருள்பாலிப்பு

திருச்சி; பகவதி அம்மன் கோயில் திருவிழாவில் லட்சத்திற்கும் மேற்பட்ட வளையல்களால் வளைகாப்பு அலங்காரத்தில் பகவதி அம்மன் அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர்  அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயில் 124ம் ஆண்டு திருவிழா டிச 26. ம் தேதி கம்பம் நடுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தார். விழாவில் 7ம் நாள் இன்று பகவதி அம்மனுக்கு லட்சத்திற்கும் மேற்பட்ட வளையல்களால் நேர்த்தியாக வளைகாப்பு அம்மன்  அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து அலங்காரம் மற்றும் அபிஷேக தீபாரதனை நடைபெற்றது. மேலும் பக்தர்களின் மீது தீர்த்தம் தெளிக்கப்பட்டது. குழந்தைப்பேறு, திருமணத் தடை நீங்கும் வேண்டுதலை நிறைவேற்ற பக்தர்கள் வளையல்கள் - அம்மனுக்கு அளித்தனர்.

இந்நிகழ்வில் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !