கோவையில் சுவாமி ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம், புஷ்பாஞ்சலி
ADDED :352 days ago
கோவை; ஸ்ரீ சபரிச சேவா சங்கம் சார்பில் பன்னிரண்டாம் ஆண்டு ஐயப்பன் மஹோத்சவம் கோவையில் நடைபெற்றது. கோவை இடையர்பாளையத்தில் உள்ள வி. ஆர். ஜி. திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் சுவாமி ஐயப்பனுக்கு புஷ்பாஞ்சலி நடைபெற்றது. அதற்கு முன்பாக ஐயப்பன் திருஉருவ சிலைக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.