சக்தி விநாயகர் கோவிலில் விளக்கு பூஜை பெண்கள் பங்கேற்பு
ADDED :352 days ago
கூடலுார்; மசினகுடி ஸ்ரீ சக்தி விநாயகர் கோவிலில் நடந்த விளக்கு பூஜையில் திரளாக பெண்கள் பங்கேற்று பூஜை செய்தனர். முதுமலை மசினகுடி ஸ்ரீ சக்தி விநாயகர் கோவிலில் திருவிளக்கு பூஜை நிகழ்ச்சிகள் நடந்தது. காலை சங்காபிஷேகம், மாலையில் விநாயகருக்கு சிறப்பு பூஜையுடன் திருவிளக்கு பூஜை நடந்தது. இதில், 140 பெண்கள் பங்கேற்று திருவிளக்கு பூஜை செய்தனர். விழாவில், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் ஈஸ்வரி, பார்வதி, தாயம்மா, கிரீஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ஸ்ரீ அம்மன் திருவிளக்கு பூஜை குழு, வேலுநாச்சியார் உழவார பணிக்குழு, திருநாவுக்கரசர் உழவார பணிக்குழுவினர் செய்திருந்தனர்.