மாரியூர் பூவேந்திய நாதர் கோயிலில் தீர்த்தவாரி உற்ஸவம்
ADDED :352 days ago
சாயல்குடி; சாயல்குடி அருகே மாரியூரில் பூவேந்திய நாதர் கோயிலில் தீர்த்தவாரி உற்ஸவம் நடந்தது. தீர்த்தவாரி உற்ஸவ விழாவை முன்னிட்டு, பூவேந்திய நாதர் கோயிலில் ஜன.,4ல் 1008 திருவிளக்கு பூஜை நடந்தது. இரவில் ஆன்மிக பல்சுவை நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று முன்தினம் உற்ஸவ மூர்த்திகளுக்கு அபிஷேக அலங்காரத்தில் தீபாராதனைகள் நடந்தது. மாலையில் சுவாமி, அம்பாள் வீதி உலா நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை சமஸ்தான நிர்வாகத்தினர், மகாசபை பிரதோஷ அன்னதான கமிட்டியினர் செய்தனர்.