உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்

அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்

அன்னூர்; அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் இன்று தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது.


அன்னூர் மன்னீஸ்வரர் கோவில் 25ம் ஆண்டு தேர்த் திருவிழா கடந்த 3ம் தேதி கிராம தேவதை வழிபாடுடன் துவங்கியது. 4ம் தேதி கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து தினமும் இரவு சுவாமி வெவ்வேறு வாகனங்களில் திரு வீதியுலா வந்து அருள் பாலித்தார். நேற்று காலை 11:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இன்று காலை 8:00 மணிக்கு மன்னீஸ்வரர் அருந்தவ செல்வி உடன் தேருக்கு எழுந்தருளினார். காலை 10:00 மணிக்கு சிறப்பு பூஜைகளுக்கு பின் தேரோட்டம் துவங்கியது. பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள், கூனம்பட்டி ஆதீனம், காமாட்சிபுரம் ஆதீனம் உள்ளிட்டோர் வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். இரவு 7:00 மணிக்கு பவளக்கொடி வள்ளி கும்மியாட்டம் நடக்கிறது. இரவு 8:00 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !