பரமக்குடியில் நடன கோபால நாயகி சுவாமிகள் அவதார தினம்
ADDED :290 days ago
பரமக்குடி; பரமக்குடியில் நடன கோபால நாயகி சுவாமிகளின் திரு அவதார தின உற்சவம் நடந்தது.
பரமக்குடி சவுராஷ்டிர பிராமண மகா ஜனங்களுக்கு சொந்தமான சுந்தரராஜ பெருமாள் கோயிலில், நடனகோபால நாயகி சுவாமிகளின் தனிச்சன்னதி உள்ளது. பெருமாளின் கீர்த்தனைகளை பாடி அவரின் திருவடிகளை அடைய நினைத்த சுவாமிகள், தன்னை நாயகியாக பாவித்து அலங்காரம் செய்து கொண்டார். தொடர்ந்து ஆண்டாளின் அம்சமாக அவதாரம் செய்த நாயகி சுவாமிகளுக்கு, நேற்று காலை 7:25 மணி தொடங்கி ஹோமம், அபிஷேகங்கள் நடந்தது. காலை 11:00 மணிக்கு புஷ்ப சப்பரத்தில் அலங்காரமாகி திருவீதி புறப்பாடு நடந்தது. மாலை 6:00 மணிக்கு நடந்த திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். தேவஸ்தான டி, ஸ்ரீமந் நடன கோபால நாயகி ஸ்வாமிகள் கைங்கர்ய சமாஜத்தினர் கலந்து கொண்டனர்.