மார்கழி கடைசி நாள்; கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதிக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :451 days ago
கோவை; கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் மார்கழி மாதம் முழுவதும் சிறப்பு வழிபாடு நடைபெற்று வந்தது. இன்று மார்கழி கடைசி நாள் மற்றும் புனர்பூசம் நட்சத்திரத்தை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. இதில் சர்வ அலங்காரத்தில் வெங்கடேச பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.