கரி வரதராஜ பெருமாள் கோவிலில் புஷ்ப அலங்காரத்தில் அருள்பாலித்த ஆண்டாள்
ADDED :622 days ago
கோவை; அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் மார்கழி மாதத்தின் கடைசி நாளையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் இருக்கும் ஆண்டாள் சன்னதியில் உள்ள சிலைக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. இதில் சந்தன காப்பு அலங்காரத்துடன் சர்வ புஷ்ப அலங்காரத்தில் ஆண்டாள் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.