உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மார்கழி உற்ஸவங்கள் நிறைவு

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மார்கழி உற்ஸவங்கள் நிறைவு

ஸ்ரீவில்லிபுத்தூர்; ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் மார்கழி உற்ஸவ விழாக்கள் கணு உற்சவம், முத்து குறி வைபவத்துடன் நேற்று நிறைவடைந்தது. இக்கோயிலில் டிச.31 முதல் பகல்பத்து உற்ஸவத்துடன் துவங்கிய மார்கழி மாத விழாவில் ராப்பத்து, சொர்க்கவாசல் திறப்பு, எண்ணெய் காப்பு உற்ஸவங்கள் நடந்தது. விழாவில் நிறைவு நாளான நேற்று முன் தினம் மணவாள மாமுனிகள் சன்னதியில் மங்களாசாசனம் நடந்தது. நேற்று மாலை வடபத்ர சயனர் சன்னதியில் கணு உற்ஸவமும், இரவில் முத்து குறி வைபவம் நடந்தது. இதில் ஆண்டாளுக்கு கைத்தறி சேலை சாற்றி சிறப்பு வழிபாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதனையடுத்து மார்கழி மாத உற்ஸவங்கள் முடிவடைந்தது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம், பட்டர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !