திருச்செந்துார் கடற்கரையில் பக்தர்கள் புனித நீராட தடை
துாத்துக்குடி; திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள், கடற்கரையில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். கோவில் முன் உள்ள கடற்கரையில் அதிக அளவில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. 50 அடி நீளத்திற்கு 8 அடி ஆழத்திற்கு கடற்கரையில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. பக்தர்கள் கடற்கரையில் கோவில் முன் உள்ள படிக்கட்டு பகுதியில் இருந்து கடலுக்குள் இறங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தகரம் மற்றும் கம்புகளை கொண்டு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் ஆழமான பாறைகள் நிறைந்த பகுதி என்பதால், பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவிலில் இருந்து 100 மீட்டர் துாரத்தில் உள்ள கடற்கரையில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். கடலில் குளிக்கும்போது கவனமாக இருக்கும்படி கோவில் கடற்கரை பாதுகாப்பு பணியாளர்களும், போலீசாரும் எச்சரித்தனர்.