உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி
ADDED :575 days ago
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் தனி சன்னதியாக சேத்திர பால பைரவர் உள்ளார். தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு மூலவர் சேத்திர பால பைரவருக்கு பால், பன்னீர், இளநீர், மஞ்சள் பொடி உள்ளிட்ட 11 வகையான அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. செவ்வரளி மாலை சூட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.