சத்ய சாய்பாபா பஜனை நிகழ்ச்சி; பக்தர்கள் வழிபாடு
ADDED :227 days ago
கோவை; சத்ய சாயி சேவா நிறுவனங்கள் சார்பில் கோவை ராம்நகர் கோதண்ட ராமசுவாமி கோவிலில் சத்ய சாய்பாபாவின் பஜனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோவை வடவள்ளியில் உள்ள ஸ்ரீ சத்ய சாய் சேவா சமிதி பக்தர்கள் சார்பாக பகவான் சத்ய சாய்பாபாவின் பஜனை பாடல்களை பாடினர். இந்த நிகழ்ச்சியில் பகவான் சத்திய சாய்பாபாவின் திரு உருவப்படம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பக்தர்கள் கலந்து கொண்டனர்.