உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளாத்தீஸ்வரர் கோயிலில் ராகு-கேது பெயர்ச்சி விழா!

காளாத்தீஸ்வரர் கோயிலில் ராகு-கேது பெயர்ச்சி விழா!

உத்தமபாளையம்:உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் கோயிலில், ராகு-கேது பெயர்ச்சி விழா விமரிசையாக நடந்தது. உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் கோயிலில் ராகு-கேதுவுக்கு தனி கோயில்கள் உள்ளன. பரிகார ஸ்தலமாகவும் இக்கோயில் விளங்குகிறது. நேற்று ராகு-கேது பெயர்ச்சி முன்னிட்டு, காலை 7 மணிக்கு விஷேச ஹோமம், 12 ராசிக்குரிய தோஷ பரிகார ஹோமம், பெயர்ச்சி அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தது. சயாக 10.36 மணிக்கு ராகு பவான் விருச்சிக ராசியிலிருந்து துலாம் ராசிக்கும், கேது பகவான் ரிஷபராசியிலிருந்து மேஷராசிக்கும் பெயர்ச்சியடைந்தார். இதனை முன்னிட்டு பெயர்ச்சியால் பலன்பெறும் ராசிக்காரர்களும், பரிகார ராசிக்காரர்களும் பகவான்களுக்கு சிறப்பு அர்ச்சனைகளும் ஆராதனைகளும் செய்தனர். 11.30 மணிக்கு திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சி நடந்தது. ராகு பகவான்-சிம்ஹிகைதேவிக்கும், கேதுபகவான்-சித்திரலேகாதேவிக்கும் திருக்கல்யாணம் நடத்தி வைக்கப்பட்டது. திருமணக்கோலத்தில் ராகு, கேது பகவான்கள் தம்பதி சமேதமாக பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவில் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !