/
கோயில்கள் செய்திகள் / உலகின் மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வான மகா கும்பமேளாவில் சந்தியா ஆரத்தி; பக்தர்கள் பரவசம்
உலகின் மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வான மகா கும்பமேளாவில் சந்தியா ஆரத்தி; பக்தர்கள் பரவசம்
ADDED :279 days ago
பிரயாக்ராஜ்; உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் உள்ள ராம்காட்டில் நடைபெற்ற புனித கங்கை நதிக்கு அர்ப்பணிக்கப்பட்ட சந்தியா ஆரத்தியில் ஏராளமானோர் கலந்து கொண்டு வழிபட்டனர்.
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா சிறப்பாக நடைபெற்று வருகிறது. உலகின் மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வுகளில் ஒன்றாக விளங்கும் இந்த மகா கும்பமேளா வில் ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இங்கு பல்வேறு சிறப்பு வழிபாடுகள் தினமும் நடைபெற்று வருகிறது. கங்கா ஆரத்தி, சூரிய அஸ்தமனத்தில் நதியை வணங்க நடத்தப்படும் ஒரு பாரம்பரிய விழாவாகும். சிறப்பு மிக்க பிரயாக்ராஜில் ராமர்படித் துறையில் நேற்று இரவு சந்தியா ஆரத்தி வழிபாடு நடந்தது. திரளான பக்தர்கள் வழிபட்டனர்.