உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நின்றாடு பாம்பே

நின்றாடு பாம்பே

மனம் என்னும் பாம்பு மனிதனை ஆட்டி வைக்கிறது. அதை அடக்கும் விதத்தை விளக்கிய சித்தர் பாம்பாட்டிச் சித்தர். இவரின் பாடல்கள் ‘நின்றாடு பாம்பே’ என்ற சொல்லுடன் முடியும். சட்டை முனிவரின் சீடரான இவர் மருதமலையில் வாழ்ந்தார்.  

மனித உடம்பில் உள்ள ஆறு ஆதாரங்களில் முதன்மையானது மூலாதாரம். குண்டலினி சக்தி இங்கு பாம்பு வடிவில் சுருண்டு கிடக்கிறது. இதனை விழித்தெழச் செய்யப் பாடியவர் என்பதால் இவருக்கு இப்பெயர் வந்தது என்றும் சொல்வர். சித்தர் ஞானக்கோவை என்னும் நுாலில் உள்ள 130 பாடல்களில் பாம்பு பற்றி பாடியுள்ளார். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !