உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எதிரிபயம் போக்குபவர்

எதிரிபயம் போக்குபவர்

கண்ணுக்கு எட்டிய துாரம் வரை எதிரியே இல்லை என்பார்கள் சிலர். ஆனால் அவர்களின் காலைச் சுற்றிய பாம்பாக எதிரிகள் உடனிருந்து அவர்களையே கொல்வார்கள். இன்னும் சிலர் பேசும் போது எதிரில் இருப்பவர்களைப் பேசக்கூட அனுமதிக்க மாட்டார்கள். உண்மையிலேயே எதிரி யார் என்பதே தெரியாமல் இவர்கள் அறியாமையில் வாழ்கிறார்கள்.     மனதில் தோன்றும் விருப்பு, வெறுப்பு, ஆணவம், பொறாமை, ஆசை எண்ணங்களே உண்மையான எதிரிகள்.  இவர்களை வெற்றி பெற்றால் மட்டுமே கடவுளை தரிசிக்கும் வாய்ப்பு ஒருவருக்கு கிடைக்கும். இந்நிலையை அடைய மகான் ராமானுஜரை மனதில் எப்போதும் சிந்தியுங்கள். உங்களுக்கு எதிரியே இருக்க மாட்டார்கள் என சத்தியம் செய்கிறார் கருடாழ்வாரின் அம்சமான எம்பார் சுவாமிகள். இவர் பாடிய இந்த பாடலை தினமும் விளக்கேற்றி பாடினால் உங்களுக்கு மட்டுமல்ல... உங்களின் வம்சத்திற்கே எதிரி இருக்க மாட்டார்கள்.  பற்பமெனத் திகழ் பைங்கழல்   உந்தன் பல்லவமே விரலும்பாவனமாகிய பைந்துவராட   பதிந்த மருங்கழகும்முப்புரி நுாலொடு முன்கையில்   ஏந்திய முக்கோல் தன்னழகும்முன்னவர் தந்திடு மொழிகள்   நிறைந்திடு முறுவல் நிலாவழகும்எப்போதும் கற்பகமே விழி கருணை   பொருந்திடு(ம்) கமலக் கண்ணழகும்காரிசுதன் கழல் சூடிய முடியும்   கணணச் சிகைமுடியும்எப்பொழுதும் எதிராசர் வடிவழகு    என் இதயத்துளதால்இல்லை எனக்கெதிர் இல்லை   எனக்கெதிர் இல்லை எனக்கெதிரே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !