பெரியாண்டவர் கோவிலில் லட்சார்சனை; சப்த கன்னிகளுக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :297 days ago
சங்கராபுரம்; சங்கராபுரம் அடுத்த பெருமணம் கிராமத்தில் உள்ள பெரியாண்டவர் கோவிலில் லட்சார்சனை நடந்தது. அதனையொட்டி நேற்று கணபதி ஹோமம் நடந்தது. தொடர்ந்து பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் பெரியாண்டவர் மற்றும் பூர்ண புஷ்கலா, சப்த கன்னிகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.