துடியலூர் விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :414 days ago
பெ.நா.பாளையம்; துடியலூர் அருள்மிகு புருசுண்டி விநாயகர் திருக்கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. துடியலூர் விநாயகர் கோவில் வீதியில் புருசுண்டி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகத்தை ஒட்டி முதல் நாள் விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, வேதிகார்ச்சனை, முதல் கால யாக வேள்வி, தீபாராதனை நிகழ்ச்சிகள் நடந்தன. இரவு பிரசாதம் வழங்குதல், விநாயகருக்கு அஷ்ட பந்தன மருந்து சாற்றுதல் நிகழ்ச்சிகள் நடந்தன. இரண்டாம் நாள் விக்னேஸ்வர பூஜை, இரண்டாம் கால யாக வேள்வி, தீபாராதனை தொடர்ந்து கும்பாபிஷேகம், அன்னதானம் நடந்தது. விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.