பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் பந்தக்கால் நடும் விழா
ADDED :292 days ago
உத்திரமேரூர்; உத்திரமேரூர் தாலுகா பெருநகர் கிராமத்தில், பட்டுவதனாம்பிக்கை சமேத பிரம்மபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும், தைப்பூச பெருவிழா வெகுவிமரிசையாக நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான தைப்பூச பெருவிழா, பிப்., 2-ல் துவங்கி, 15ம் தேதி -வரை நடக்க உள்ளது. இதை முன்னிட்டு, கோவில் வளாகத்தில் பாரம்பரிய முறைப்படி பந்தக்கால் நடும் விழா நேற்று நடந்தது. இதில், கோவில் அறங்காவலர் குழுவினர், ஊராட்சி தலைவர், பரம்பரை அர்ச்சகர்கள், கிராமத்தினர் பங்கேற்றனர். முக்கிய நிகழ்வாக, பிப்., 8ம் தேதி தேர் திருவிழா நடக்க உள்ளது.