உத்திரமேரூர் கேதாரீஸ்வரர் கோவிலில் தகவல் பலகை அமைப்பு
ADDED :292 days ago
உத்திரமேரூர்; உத்திரமேரூரில் பழமை வாய்ந்த கேதாரீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு, பிரதோஷம், சிவராத்திரி ஆகிய நாட்களில் சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது. இக்கோவிலில், ஒரு கால பூஜை மட்டுமே நடந்து வருகிறது. இதனால், கோவில் எப்போதும் பூட்டிய நிலையிலே இருந்து வருகிறது. வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள், சுற்றுலா பயணியர் உள்ளே செல்ல முடியாமல், ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். மேலும், கோவிலில் நடைபெறும் முக்கிய விஷேசங்கள் குறித்து தெரிந்து கொள்ள, தகவல் பலகை இல்லாமல் உள்ளது. இதுகுறித்து, நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, இக்கோவில் காலை மற்றும் மாலை நேரங்களில் திறக்கப்பட்டு வருகிறது. கோவிலில் நடைபெறும் விசேஷங்கள் குறித்து தெரிந்து கொள்ள, தகவல் பலகையும் வைக்கப்பட்டு உள்ளது.