வீடுகட்ட தோண்டிய பள்ளத்தில் சிவலிங்கம்!
ADDED :4717 days ago
தேவாரம்: தேவாரத்தில் வீடு கட்ட பள்ளம் தோண்டிய போது, ஒரு அடி உயரமுள்ள சிவலிங்கம் கிடைத்தது.தேனி மாவட்டம் தேவாரம் கருமலையாண்டி கோயில் தெரு வை சேர்ந்தவர் சுப்பையா. நேற்று, இவரது வீட்டின் பின்புறமுள்ள காலியிடத்தில் கட்டடம் கட்ட பள் ளம் தோண்டினார். மூன்றடி ஆழம் தோண்டிய போது, ஒரு அடி உயரமுள்ள சிவலிங்கம் தட்டுப்பட்டது. பணியாளர்கள் சிவலிங்கத்தை வெளியே எடுத்தனர். தகவல் பரவியதால் பெண்கள் குங்குமம், சந்தனம் பூசி வழிபாடு செய்தனர். வீட்டு உரிமையாளர் சுப்பையா கூறுகையில், "சின்னதேவி கண்மாய் கரையின் கீழ்புறமுள்ள, பழமையான அவனாசி ஈஸ்வரன் கோயிலில், சிலை பிரதிஷ்டை செய்யப்படும், என்றார்.