விளமல் மதுரபாஷினி அம்மனுக்கு தை வெள்ளி சிறப்பு அபிஷேகம்
ADDED :421 days ago
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் தை வெள்ளி சிறப்பு பூஜை நடைபெற்றது.
திருவாரூர் அருகே விளமலில் மிகவும் பழமை வாய்ந்த பதஞ்சலி மனோகரர் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் முக்கிய நிகழ்ச்சிகள் மற்றும் அமாவாசை, பவுர்ணமி மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜை நடந்து வருகிறது. அதன்படி இன்று (31ம் தேதி) தை வெள்ளியை முன்னிட்டு மதுரபாஷினி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் பூஜையில் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை சந்திரசேகர சிவாச்சாரியார் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.