உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வசந்த பஞ்சமி; அயோத்தி ராமர் கோவிலில் குவிந்த பக்தர்கள்.. பாலராமரை தரிசித்த பரவசம்

வசந்த பஞ்சமி; அயோத்தி ராமர் கோவிலில் குவிந்த பக்தர்கள்.. பாலராமரை தரிசித்த பரவசம்

அயோத்தி ; அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி கோயிலில் வசந்த பஞ்சமியை முன்னிட்டு பாலராமரின் தரிசனம் காண ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.


வசந்த பஞ்சமி, வட இந்தியாவில் கொண்டாடப்படும் சிறப்பான விழாக்களில் ஒன்றாகும். இது ரிஷி பஞ்சமி, ஸ்ரீ பஞ்சமி என்று அழைக்கப்படுகிறது. வட இந்தியாவில் வசந்த பஞ்சமி நாளில் வீடுகளிலும், கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. இன்று வசந்த பஞ்சமியை முன்னிட்டு, அயோத்தி ராமர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மஞ்சள் ஆடையில் வில்லேந்தி நின்ற பாலராமரின் தரிசனம் கண்டு பக்தர்கள் பரவசமடைந்தனர். லட்சக்கணக்கான பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !