பிரகதீஸ்வரர் கோவிலில் தர்மபுரம் ஆதீனம் தரிசனம்
ADDED :313 days ago
விருத்தாசலம்; விருத்தாசலம் அடுத்த வேட்டக்குடி கிராமத்தில் பிரன்னவனாகி உடனாய பிரகதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில், தர்மபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள், நேற்று சுவாமி தரிசனம் செய்தார். முன்னதாக ஸ்ரீலஜி வீரஞான தேசிக சுவாமிகள், தர்மபுரம் ஆதீனத்திற்கு திருக்கோவில் சார்பில் மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்து, பிரன்னவனாகி உடனாய பிரகதீஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. இதில் கோவில் ஊழியர்கள், சிவனடியார்கள் உள்ளிட்டோர் தரிசனம் செய்தனர்.