விண்ணளந்த பெரிய பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழா
ADDED :324 days ago
பொங்கலூர்; கொடுவாய் அலமேலு மங்கா நாச்சியார் சமேத ஸ்ரீ விண்ணளந்த பெரிய பெருமாள் கோவிலில் கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேக முதலாம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி புண்யாகம், சுதர்சன ஹோமம், மகா அபிஷேகம், அலங்கார பூஜை, தீபாராதனை நடந்தது. தீர்த்தம், பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஆவுடை நாயகி வழிபாட்டு மன்ற அறக்கட்டளை, ஊர் பொதுமக்கள், திருக்கோவில் நிர்வாகத்தினர் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.