திருத்தணி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்; காத்திருந்து தரிசனம்
ADDED :297 days ago
திருத்தணி; தைப்பூச திருவிழாவை முன்னிட்டு திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு காலை முதலே, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இதனால், பொதுவழியில், நீண்ட வரிசையில், மூன்று மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர். பக்தர்கள் காவடிகளுடன் வந்தும், மொட்டை அடித்தும் முருகப் பெருமானை வழிப்பட்டனர். முன்னதாக, அதிகாலை 5:00 மணிக்கு, மூலவருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், தங்கவேல், தங்ககீரிடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது. பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.