சித்தப்பட்டி மகாசித்தேசுவரர் கோயிலில் சிறப்பு யாகம்
ADDED :263 days ago
திருப்புத்தூர்; திருப்புத்தூர் அருகே சித்தப்பட்டியில் மகாசித்தேசுவரர் கோயிலில் சிறப்பு யாகம் நடந்தது. இக்கோயிலில் உலக நன்மைக்காக சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. மூலவர் சன்னதி முன்பாக கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் துவங்கியது. தொடர்ந்து கோபூஜை நடந்தது. பின்னர் நெய்,வஸ்திரயாகம்,புஷ்பயாகம் நடந்து பூர்ணாகுதி தீபாராதனை நடந்தது. தொடர்ந்து யாகசாலை புனித கலசங்கள் புறப்பாடாகி மூலவருக்கு அபிஷேகம் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சித்தேஸ்வரருக்கு மகா தீபாராதனை நடந்து.தொடர்ந்து சிவனடியார்கள் அம்மையப்பர் வழிபாடு செய்தனர்.ஏற்பாட்டினை மதுரை ஆலவாயர் அருட்பணி மன்றம், மகா சித்தேஸ்வரர் ஆன்மீக பேரவை மற்றும் கிராமத்தினர் செய்தனர்.