பெருமாள் கோயில்களில் ஏகாதசி சிறப்பு பூஜை; பக்தர்கள் தரிசனம்
ADDED :366 days ago
திருவாடானை; திருவாடானை அருகே பாண்டுகுடி லட்சுமிநாராயண பெருமாள், ஆலம்பாடி கரியமாணிக்க பெருமாள், தொண்டி உந்திபூத்த பெருமாள் கோயில்களில் ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. பால், பஞ்சாமிர்தம், சந்தனம் போன்ற பல்வேறு வகை அபிஷேகங்கள் நடந்தது. மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.