திருவண்ணாமலை பகவான் யோகி ராம் சுரத்குமாரின் ஆராதனை விழா நிறைவு
ADDED :593 days ago
திருவண்ணாமலை; யோகி ராம் சுரத்குமார் ஆசிரமத்தில், பகவான் யோகி ராம் சுரத்குமாரின் 24ம் ஆண்டு ஆராதனை நிறைவு விழாவில் மகன்யாச பூஜை நடந்தது. இதையொட்டி யோகி ராம் சுரத்குமார் சன்னதிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.