உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஈஷா மஹாசிவராத்திரி விழாவிற்கு தடையில்லை; சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

ஈஷா மஹாசிவராத்திரி விழாவிற்கு தடையில்லை; சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

சென்னை; கடந்த ஆண்டு கொண்டாட்டத்தின் போது இஷா மாசு விதிமுறைகளை மீறிவிட்டதாக குற்றம் சாட்டிய மனுவை நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் நீதிபதி கே ராஜசேகர் ஆகியோர் தள்ளுபடி செய்தனர். தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், ஈஷாவில் திட, திரவ அல்லது ஒலி மாசுபாட்டைக் கையாள போதுமான வசதிகள் உள்ளன என்று தெவித்ததை அடுத்து ஈஷா மஹாசிவராத்திரி விழாவிற்கு தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. 


ஈஷாவில், 31வது மஹாசிவராத்திரி கொண்டாட்டங்கள் வரும், 26ம் தேதி நடக்கிறது. மஹாசிவராத்திரி விழா ஆதியோகி முன், மாலை 6:00 முதல் மறுநாள் காலை 6:00 மணி வரை நடக்க உள்ளது. சத்குரு முன்னிலையில் நடக்கும் விழாவில் சக்திவாய்ந்த தியானங்கள், மந்திர உச்சாடனைகள், தலைசிறந்த கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகள் இடம்பெறும். தமிழகத்தை சேர்ந்த பாடகர் சத்ய பிரகாஷ், கர்நாடகாவை சேர்ந்த பாடகி சுபா ராகவேந்திரா, பாரடாக்ஸ் என அழைக்கப்படும் தனிஷ் சிங், மராத்தி இசை சகோதரர்கள் அஜய் - அதுல், குஜராத் நாட்டுப்புற கலைஞர் முக்திதான் காத்வி மற்றும் இந்திய மொழிகளில் ஆன்மிகப் பாடல்களை பாடி சமூக ஊடகங்களில் வைரலான, ஜெர்மன் பாடகி கசான்ட்ரா மே ஆகியோர் இசை நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !