பிரம்மகிரி அய்யாசாமி கோவிலில் மஹா சிவராத்திரி விழா; செண்டா மரம் ஸ்தாபனம்
ADDED :253 days ago
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு பிரம்மகிரி அய்யாசாமி கோவிலில் இன்று (25ம் தேதி) செண்டா மரம் ஸ்தாபனம் செய்யப்பட்டது.
கிணத்துக்கடவு, பிரம்மகிரி அய்யாசாமி கோவிலில், மகா சிவராத்திரி நிகழ்ச்சி கடந்த 19ஆம் தேதி, கணபதி பூஜையுடன் நிகழ்ச்சிகள் துவங்கியது. 20 முதல் 23ம் தேதி வரை, சுவாமிக்கு, பால் பூஜை, அலங்கார பூஜை மற்றும் படி விளையாட்டு போன்றவைகள் நடந்தது. இன்று 25ம் தேதி, செண்டா மரம் ஸ்தாபனம் செய்யப்பட்டது. இதில், பக்தர்கள் பலர் ஒன்றிணைந்து வாய்தியங்களுடன் செண்டா மரம் எடுத்து ஊர்வலமாக வந்து அரோஹரா கோஷங்கள் முழங்க கோவிலின் முன்பு வைக்கப்பட்டது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. நாளை 26ம் தேதி, சுவாமி திருவீதி உலா நிகழ்வு நடக்கிறது. மார்ச் 3ம் தேதி, சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் மறு பள்ளையம், அலங்கார பூஜைகள் நடக்கிறது.