வட மாநிலங்களில் மகா சிவராத்திரி விழா; பக்தர்கள் பரவசம்
ADDED :258 days ago
வட இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற சிவன் கோவில்கள், காசி விஸ்வநாத் மற்றும் பத்ரிநாத் தாம் ஆகியவை சாவான் மாதத்தில் சிறப்பு பூஜைகள் மற்றும் சிவ தரிசனம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான சிவ பக்தர்கள் சிவன் தலங்களுக்குச் சென்று கங்காஜல அபிஷேகம் செய்து வழிபட்டனர். பிரயாக்ராஜ், மகா சிவராத்திரியை முன்னிட்டு கோவிலில் சிவ லிங்கத்திற்கு அபிஷேகம் செய்து பக்தர்கள் வழிபட்டனர். ஜார்க்கண்ட் வைத்தியநாதர் கோவிலில் காத்திருந்து ஏராளமான பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர். இதேபோல் டெல்லி, பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான், உத்தரகண்ட் என வட மாநிலங்களில் மகா சிவராத்திரி விரதத்தை பெண்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.