கோவிலில் படமெடுத்து ஆடிய பாம்பிற்கு பக்தர்கள் வழிபாடு
ADDED :328 days ago
திருப்பத்துார்; திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த சென்னையாம்பேட்டையில் பாலாற்றங்கரை அரசமரத்தடியில் பழமையான, வித்யா கணபதி மற்றும் நாகாலம்மன் கோவில் உள்ளது. இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். கோவில் வளாகத்தில், நல்ல பாம்பு ஒன்று புகுந்து படமெடுத்து ஆடியது. இதை பார்த்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன், நல்ல பாம்பிற்கு பால் வைத்து வழிபாடு நடத்தினர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.